சிபிஐக்கு எதிராக மேற்குவங்க முதலமைச்சரின் தர்ணா போராட்டம் எதிரொலியாக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களின் முழக்கத்தால் மாநிலங்களவை நண்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவை இன்று கூடியவுடன் மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, கொல்கத்தா காவல் ஆணையரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க சென்றது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்ற அறிக்கையை சமர்ப்பித்தனர். அதுகுறித்து விவாதிக்கவும் சபாநாயகரிடம் நேரம் கேட்டனர். ஆனால், சபாநாயகர் வெங்கையாநாயுடு அதற்கு மறுப்புத் தெரிவித்தார். இதனால் அவையின் மத்தியில் வந்த திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அதேப்போன்று மக்களவையும் இதே காரணத்துக்காக நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.