மக்களவையைத் தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்துள்ள இந்து, சமண, பவுத்த, பார்சி, கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆறாண்டுகள் குடியிருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்நிலையில், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானது. இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவரது ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.