மேகேதாட்டு விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்களின் தொடர் முழக்கத்தையடுத்து மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய பா.ஜ.க. அரசு முனைப்பு காட்டி வருகிறது.இந்நிலையில் மாநிலங்களவை இன்று துவங்கிய உடனே, மேகேதாட்டு விவகாரத்தை கையிலெடுத்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். இதையடுத்து மாநிலங்களவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து அவை தலைவர் வெங்கைய நாயுடு உத்தரவிட்டார்.பகல் 12 மணியளவில் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மசோதா தாக்கல் ஆவது தாமதமாகியுள்ளது.