2025ம் ஆண்டுக்குள் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதால், அனைத்து நாடுகளும் முதலீடு செய்யலாம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ராஜ்நாத் சிங் தாய்லாந்து சென்றுள்ளார். தலைநகர் பாங்காக்கில் ‘இந்தியாவின் எழுச்சி’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கோண்டு பேசிய அவர், 2025ம் ஆண்டுக்குள் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 20 லட்சம் முதல் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தின் கோவையில் பாதுகாப்புத் துறையின் புத்தாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post