இந்தியா-சீன எல்லையில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழல் குறித்து, முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
லடாக் எல்லையில் சீன ராணுவம் படைகளை குவித்து வருவதால், இந்தியா-சீனா எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆலோசனையில் பங்கேற்றனர்.
அப்போது, இந்தியா-சீனா எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் பாதுகாப்பை பலப்படுத்துவது, சீன அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்க வியூகம் அமைப்பபது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post