இந்தியாவின் எல்லைகள் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய அனுமதி: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் எல்லைகள் குறித்து வரலாற்றை ஆய்வு செய்து, கட்டுரைகள் எழுத மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளார்.

இந்திய எல்லைகள் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்வது தொடர்பாக இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், ஆவண காப்பக இயக்குனரகம், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இதில் எல்லைகள் குறித்த வரலாறுகளை ஆய்வு செய்வது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எல்லைகள் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளார். எல்லைகள் தொடர்பான வரலாற்று ஆய்வுகள் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்விற்கு பிறகு அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, திபெத், இலங்கை ஆகியவற்றுடனான எல்லைப் பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண வழி கிடைக்கும் என இந்திய அரசு கருதுகிறது.

Exit mobile version