பேட்ட திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்துவருகிறார்.இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் 11 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்துடன் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார்.இவர்களின் ஜோடியை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மிக விறுவிறுப்பாக தர்பார் திரைப்படத்தின் படபிடிப்பு நடந்து வரும் நிலையில் ரஜினிகாந்த் தனது பேரனுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவின் மகன் தேவ் கிருஷ்ணாவை ரஜினிகாந்த் தூக்கி வைத்து கொண்டு இருப்பது போன்ற புகைப்படத்தை சவுந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ‘ என்னுடைய உலகமே எனது தந்தையும், எனது மகனும் தான் ’ என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
#MyWorld #Lifelines ❤️❤️❤️ my darling appa and ved papa ??? #AtDarbarShoot pic.twitter.com/V6K1hf98tq
— soundarya rajnikanth (@soundaryaarajni) June 8, 2019
மேலும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் எனது ஐபோனில் இருக்கும் ஒரே candid புகைப்படம், ரஜினி அவரின் பேரனுடன் இருக்கும் புகைப்படமே என குறிப்பிட்டு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Rajini Sir with his grandson – the only candid pics on my i phone ? they were watching the monitor ? pic.twitter.com/XMyWV4Uh6R
— SantoshSivanASC. ISC (@santoshsivan) June 8, 2019
Discussion about this post