பாஜகவின் தேர்தல் வெற்றி மோடி என்ற தனிமனிதனுக்கு கிடைத்தது: ரஜினிகாந்த்

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது, நரேந்திர மோடி என்ற தனிமனிதனுக்கு கிடைத்த வெற்றி என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேபோல், கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில், கனிசமான வாக்குகளை கமலஹாசன் பெற்றிருப்பது, பாராட்டுக்குரியது என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Exit mobile version