தாதாசாகேப் பால்கே விருது: தொலைபேசியில் ரஜினியை வாழ்த்திய முதல்வர்

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மேலும் இதுகுறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் முதலமைச்சர் தெரிவித்ததாவது: 

திரைத்துறையில் தங்களது நடிப்புத் திறமைக்கும், கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது ஆகும். தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.தாங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Exit mobile version