பாரதிய ஜனதா கட்சி மக்கள் செல்வாக்கை இழந்துள்ளது – நடிகர் ரஜினிகாந்த் விமர்சனம்

 

5 மாநில தேர்தல் முடிவுகள், பா.ஜ.க. மக்கள் செல்வாக்கை இழந்துள்ளதை காட்டுவதாக நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரிய பின்னடைவு என்று கூறியுள்ளார். முன்னதாக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்கும் மோடி பலமானவர் என ரஜினி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version