இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல் பற்றி விசாரணை செய்யாமல் கோத்தபய ராஜபக்சேவை விசாரணை செய்ய அரசு முயற்சி மேற்கொள்வதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஈஸ்டர் நாளன்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் குறித்த விசாரணைக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனத் தெரிவித்தார். கோத்தபய ராஜபக்சேவை விசாரிப்பதிலேயே அரசு அக்கறை காட்டுவதாகவும் தெரிவித்தார்.
கோத்தபய ராஜபக்ச இலங்கை கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டது பற்றி விசாரித்து உடனடி அறிக்கை தயாரித்து வழங்கும்படி உளவுத்துறையினருக்கு மேலிடம் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் மகிந்த ராஜபக்சே கூறினார்.
Discussion about this post