ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து இன்று விலகுவார் என அவரது மகன் நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக நமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், இன்று அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் எனவும் கூறியுள்ளார். மேலும் பதவியில் இருந்து விலகினாலும் அதிபர் சிறிசேன உடன் அவர் இணைந்து செயல்படுவார் எனவும் அறிவிக்கபட்டுள்ளது. முன்னதாக இலங்கையில் அக்டோபர் மாதம் 26ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டார். அதற்கு பதிலாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்து அதிபர் சிறிசேன நடவடிக்கை எடுத்தார். ஆனால் மூன்று முறை முயற்சித்தும் நாடாளுமன்றத்தில் ராஜபக்சவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post