உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை அடிவாரத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை பாலாற்றின் வழியாக திருமூர்த்தி மலையை வந்தடைந்தது. பஞ்சலிங்க அருவியில் நீர்வீழ்ச்சியாக கொட்டி திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்ந்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அணைப்பகுதியின் படகுத் துறையிலும் கூட்டம் அலை மோதுகிறது. சுற்றுலாப் பயணிகள் வருகையையடுத்து கோயில் அறநிலையத்துறை மற்றும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது.
Discussion about this post