களவாணி திரைப்பட நடிகர் விமல் தாக்கியதில் காயமடைந்த நடிகர் அபிஷேக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களவாணி திரைப்பட நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து நடிகர் அபிஷேக் உடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் அபிஷேக் காயமடைந்ததாக தெரிகிறது. காயம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிஷேக் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் புகார் அளித்துள்ளனர். இருதரப்பு புகார்களையும் பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post