முன்னதாகவே தொடங்கிய வடகிழக்கு பருவ மழையையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருமழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. தமிழக கடலோர பகுதியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்து வரும் 2 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
தமிழக தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை பரவலான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய்யம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.