காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வெப்பசலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாயப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அனல் காற்றின் தாக்கம் காணப்படும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. வெப்பசலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பாசரிலில் 5 சென்டி மீட்டர் மழையும், நடுவட்டம், கிளன்மார்கனில் 3 சென்டி மீட்டர் மழையும், கொல்லிமலை, கொடநாடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 2 சென்டி மீட்டர் மழையும், பெருந்துறையில் 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version