ஈரோட்டில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால், ஏராளமான வாழை மரங்கள் அடியோடு சரிந்து சேதம் அடைந்தது.

அக்னி வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், செவ்வாய்க் கிழமை மாலை கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால், சத்தியமங்கலம் – ஈரோடு சாலையில் இருந்த ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அடியோடு சரிந்தன.

இதேபோல், கணபதி பகுதியில், மரம் ஒன்று சரிந்து வீட்டின் மேல் கூறையில் விழுந்தது. இதில் அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கோடை மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version