வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் திருவாடானையில் 12 சென்டி மீட்டர் மழையும், தொண்டியில் 11 செட்டி மீட்டர் மழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post