தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவி வருவதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 8 செ.மீட்டர் மழையும், நாகர்கோவிலில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
Discussion about this post