வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழகத்தை பொருத்தவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 28,29 ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Exit mobile version