மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பின்பு மீண்டும் பல பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கேரளப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்தது. இதனால் கேரளா பகுதிகளை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் கடந்த புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நான்கு நாட்கள் தொடர்ந்து கனமழை பெய்தது. தற்போது, மீண்டும் கனமழை கொட்டி வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.

இதேபோல், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்து காணப்பட்டது. இதனால் விவசாயிகள் பயிரிடமால் அவதியடைந்தனர். இந்நிலையில் கடையநல்லூர், மாவடிகால், சொக்கம்பட்டி, புளியங்குடி, சிந்தாமணி, இடைக்கால், கண்மணியபுரம், கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது.

மழையை தொடர்ந்து விவசாயிகள் நடவு பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்சியடைந்தனர்.

Exit mobile version