கேரளாவில் வெள்ளம்-நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்வு

கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 104ஆக அதிகரித்துள்ளது.

ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் கேரள மாநிலம் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. மழை காரணமாக மலப்புரம், வயநாடு, இடுக்கி உட்பட 8 மாவட்டங்களில் 80 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலப்புரம் கவளப்பாறை மற்றும் வயநாடு மாவட்டம் புத்துமலை ஆகிய இடங்களில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பலரும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று காலை கவளப்பாறையில் மேலும் ஒருவர் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து இங்கிருந்து மட்டும் இதுவரை 33 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 57 பேரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

கண்ணூர், காசர்கோடு, இடுக்கி மாவட்டங்களுக்கு மட்டும் இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version