திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நொளம்பூர், ஈச்சேரி, கீழ்கூடலூர், முருக்கேரி, புதுப்பாக்கம் எண்டியூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் மாலை முதல் வானம் மேகம் சூழ்ந்து காணப்பட்டு வந்தது. பின்னர் இரவு, இடி மின்னல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவிவருகிறது.

இதேபோல், புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வந்த நிலையில் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம புறங்கள்களில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளான திருக்கணூர், மதகடிப்பட்டு, மடுகரை, திருபுவனை, வில்லியனூர், நெல்லிதோப்பு, முத்தியால்பேட்டை, எல்லைபிள்ளை சாவடி, நெல்லித்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

Exit mobile version