வயநாடு பகுதியில் மழை வெள்ளம் நிலச்சரிவால் கடும் பாதிப்பு

மழை வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்ட மலப்புரம் மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தின் நிலம்பூர், வாண்டூர், ஏர்நாடு ஆகிய பகுதிகள் மழை வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கவலப்பாரா என்னுமிடத்தில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் பூதானம் என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள பொதுமக்களை ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டோருக்கு உணவு, உடை உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை வழங்கும்படி அரசு அலுவலர்களை ராகுல்காந்தி கேட்டுக்கொண்டார்.

Exit mobile version