தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு அரபிக்கடல், குமரி கடல் மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version