ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மற்றும் தென் மேற்கு அரபிக்கடலில் தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் வரும் 10ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

Exit mobile version