ரயில்வே பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்ததாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், சான்றளிப்பவர் கையெழுத்து இல்லை எனக் கூறி, தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், ஆனால் சான்றளிப்பவரின் கையெழுத்து இல்லாத நிலையிலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். நீதிபதி தண்டபானி முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக பதிலளிக்க சிபிஐ தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
Discussion about this post