ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ஒருமையில் பேசிய காங்கிரஸை சேர்ந்த ராகுல் காந்தி அக்டோபர் 3 ம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரான்சிடமிருந்து, ‘ரபேல்’ போர் விமானம் வாங்குவதில், முறைகேடு நடந்ததாக, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ஒரு கட்டத்தில், பிரதமர் மோடியை, ‘திருடர்களின் தலைவன்’ எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ராகுல் காந்தி மீது, மகேஷ் ஸ்ரீஸ்ரீமால் என்பவர், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை பெருநகர நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி அக்டோபர் 3ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ எனக்கூறி ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.