ராகுலுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், கேரளாவுக்கு பறந்து சென்றுள்ளார் என பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியிலும், ராகுல் காந்தி கூடுதலாக போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேதி தொகுதி எம்.பி.யாக இருக்கும் ராகுல்காந்தி, பாஜகவின் வேட்பாளராக ஸ்மிருதி இரானி அறிவிக்கப்பட்டதும் பின்வாங்கி உள்ளார். அமேதி தொகுதியில் மக்கள் நலத் திட்டங்களை, செய்யாமல் இருப்பதும், காங்கிரஸ் கட்சிமேல் மக்களுக்கு இருக்கும் அதிருப்தியும் ராகுலின் அச்சத்துக்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுவே ராகுல் வயநாடில் போட்டியிட காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அமித்ஷா, அமேதியில் ராகுலுக்கு தோல்வி பயம் வந்து விட்டதால், கேரளாவுக்கு பறந்து சென்றுள்ளார் எனக் கூறியுள்ளார்.
இடதுசாரிகள் ஒன்றிணைந்து ராகுலை தோற்கடிப்போம் என்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்துள்ளார். அதேபோன்று, சோனியாகாந்தி வெற்றி பெற்ற ரேபரேலி தொகுதியிலும் காங்கிரசின் செல்வாக்கு சரிந்துள்ளது என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Discussion about this post