ரஃபேல் விமான ஊழல் குறித்தும், சி.பி.ஐ. அதிகாரிகள் மாற்றப்பட்டது குறித்தும் முறையான விசாரணை நடத்த வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் மோதல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சி.பி.ஐ.யின் இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவை இயக்குனராக நியமித்ததை எதிர்த்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், ரஃபேல் விமான ஊழலை விசாரிக்க முடிவெடுத்ததன் காரணமாகவே சி.பி.ஐ. அதிகாரிகள் மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டினார். இதனையடுத்து, ரஃபேல் விமான ஊழல் குறித்தும், அதிகாரிகள் மாற்றப்பட்டது குறித்தும் முறையான விசாரணை நடத்த வலியுறுத்தி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர். இதேபோன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர்.