ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்களை அழிக்கவே சி.பி.ஐ. இயக்குனரை மத்திய அரசு நீக்கியது – ராகுல் காந்தி

ரஃபேல் முறைகேடு தொடர்பான ஆவணங்களை அழிக்கவே, இரவோடு இரவாக சி.பி.ஐ. இயக்குனரை மத்திய அரசு நீக்கியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சி.பி.ஐ. விவகாரம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவிற்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிற்கும் அளிக்கப்பட்ட கட்டாய விடுப்பு, சட்ட விரோதம் மற்றும் கிரிமினல் குற்றம் என்று தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விமான ஊழலை விசாரிக்க முடிவெடுத்ததால் தான், அதிகாலை 2 மணிக்கு சி.பி.ஐ. இயக்குனரை நீக்கிவிட்டு, அப்போதே அவரது அறை பூட்டப்பட்டதாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்கட்சித் தலைவர் ஆகிய 3 பேர் குழு மட்டுமே சி.பி.ஐ. இயக்குநரை நியமிக்க, நீக்க முடியும் என்ற நிலையில், சி.பி.ஐ. இயக்குனரை, பிரதமர் எப்படி தன்னிச்சையாக நீக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஃபேல் முறைகேடு விவகாரம் மத்திய அரசை பயமுறுத்துவதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அரசியல் அமைப்பையும், நாட்டையும் பிரதமர் மோடி அவமதித்துவிட்டதாக கூறியுள்ளார்.

ரஃபேல் தொடர்பான ஆவணங்களை அழிக்கவே இரவோடு இரவாக சி.பி.ஐ. இயக்குநரை நீக்கி, அவரது அறை, அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ரஃபேல் விசாரணை நடைபெற்றால், மோடியால் தப்ப முடியாது என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version