தமிழகத்தை பாலைவனமாக மாற்ற ராகுல் காந்தி விரும்புவதாக முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மக்களவை அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராயக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர், அண்மையில் கர்நாடகாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காவிரி ஆற்றின் குறுக்கு மேகேதாட்டு அணை கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என தெரிவித்தாக கூறினார். இதனால் தமிழகம் பாலைவனமாக மாறுவதை அவர் விரும்புவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
ஓசூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளர் கே.பி. முனுசாமி, ஓசூர் சட்டமன்ற வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டியை ஆதரித்து மத்திகிரியில் பிரசாரம் செய்த முதலமைச்சர், தமிழக அரசின் நலத் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.
Discussion about this post