சென்னையில் கொரோனா பாதிப்பு அக்டோபர், நவம்பர் மாதத்தில் அதிகமாக வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள என்.எஸ்.கே. நகரில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பு சிறப்பு முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் மதுசூதனன் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது பேசிய சுகாதாரத்துறைச் செயலர், “கொரோனா நோய் தடுப்பு பணிகளைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை அனைத்து மாவட்டங்களில் 10% குறைவாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோள் வைத்து செயல்பட்டு வருகிறோம். இதற்காக ஒரு நாளுக்கு 90 ஆயிரம் நபர்கள் சோதனை செய்யபட்டு வருகிறார்கள். சென்னையில் மக்கள் நெருக்கமாக இருக்கக் கூடிய இடங்களில் உள்ள மக்களுக்கு எதிர்ப்பு சக்தி எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியும் சோதனை செய்ய துவங்கி உள்ளோம் . மாநிலம் முழுவதும் இந்த பணியை 10 நாட்களில் துவங்க உள்ளோம்.
இந்த நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் கவனக்குறைவாக இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். தற்போது வரை 3.2 கோடி ரூபாய் அபராத தொகையை வசூலித்து இருந்தாலும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடித்தால் மட்டுமே இந்த நோயை ஒழிக்க முடியும். சென்னையில் ஒரு சில மண்டலங்களில் மட்டும் பாதிப்பு அதிகமாகி உள்ளது. அந்த இடங்களில் இரவு நேரங்களில் சோதனை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.
மற்றவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் தெருக்களில் மைக்ரோ அளவிலான கட்டுபாட்டு பகுதி ஏற்படுத்தப்படுகிறது.அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம், அரசின் அறிவுறுத்தல்கள் பின்பற்ற வேண்டும்.
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசுகையில், “சென்னையில் மாநகராட்சி சார்பாக தற்போது வரை 57 ஆயிரம் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு உள்ளது , இந்த முகாம்களில் தற்போது வரை 30 லட்சம் நபர்கள் பயன்பெற்று உள்ளனர். தற்போது வரை 30 லட்சம் நபர்கள் சென்னையில் வீட்டு கண்காணிப்பில் இருந்து மீண்டு உள்ளனர் தற்போது 2.25 லட்சம் நபர்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். சென்னை மாநகராட்சியில் தற்போது வரை 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யபட்டு உள்ளது.பொதுமக்கள் தற்போது கவனக்குறைவாக இருக்க துவங்கி உள்ளனர் , கொரோனா பாதிப்பு குறைய துவங்கி உள்ள இந்த நேரத்தில் முக கவசம் அணிவதை நிறுத்தினால் பாதிப்பு அதிகமாகும் எனவே பொதுமக்கள் அடுத்த 3 மாதத்திற்கு முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.
அக்டோபர் , நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது. எனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காத நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.பொதுமக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் ,அரசியல் கட்சிகள் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்*.அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த வேண்டாம் என்று அவர்களுக்கு கூறி உள்ளோம் ,அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகிறோம் ,அடுத்த கட்டமாக அவர்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரைவில் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்.
சென்னையில் தனி நபர் வீடுகளில் தகரம் அடிப்பது குறித்து பதில் அளித்து பேசிய அவர்,தனி நபர் வீடுகளில் தகரம் அடிப்பதை 25 நாட்களுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு உள்ளது ,ஒரு சில இடங்களில் தவறுதல் நடைபெற்று இருக்கலாம் அவ்வாறு நடைபெற்று இருந்தால் அது உடனடியாக சரி செய்யபடும்.
சென்னையில் தடை செய்யப்பட பகுதிகள் அதிகமாகி உள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், சென்னையில் முன்பாக ஒரு பகுதியில் 10 நபர்கள் அல்லது 5 நபர்கள் இருந்தால் மட்டுமே தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 2 நபர்கள் இருந்தால் கூட தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து உள்ளோம் என்று கூறினார்.
Discussion about this post