நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமூகநீதியையும், பெண்கள் நலனையும் பேணிக் காப்போம் என்று வாய்ச் சவடால் விட்ட திமுக, மக்கள் மனங்களை ஏமாற்றி அரியணைக் கட்டிலில் ஏறியது. பொதுமக்களும் திமுகவின் பொய் வாக்குறுதிகளை நம்பி அவர்களிடம் நாட்டையே ஒப்படைத்தனர். விளைவு, தான் பிடித்த முயலுக்கு மூன்றூ கால் என்று கொக்கரிக்கத் தொடங்கியது இந்த விடியா அரசு.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு அநீதி…!
இது பெண்களுக்கான அரசு என்று கூறும் இந்த விடியா கும்பல், தன் சொந்தக் கட்சிப் பெண்களின் நலனையே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அதன் சமீபத்திய உதாரணம் விழா ஒன்றில் மேயர் பிரியாராஜனை கையைப் பிடித்து இழுத்த விவகாரம். கையைப் பிடித்து இழுத்தது வேற்றாள் இல்லை திமுக நிர்வாகிதான். அதே நிகழ்ச்சியில்தான் ஸ்டாலினும் இருக்கிறார். அவர் அதை கண்டுகொள்ளாமல் ஃபோட்டோவிற்கு போஸ் கொடுப்பதில் மும்முரம் காட்டிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை நாங்கள் விடியல் அரசு அல்ல விளம்பர அரசுதான் என்பதை நிரூபிக்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.
இதைவிட இன்னொரு கொடுமை என்னவென்றால், திமுக மகளிர் அணி சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பஞ்சாயத்து தலைவி “திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று பேசி பகீர் கிளப்பினார். இதேபோல வாரிசு எம்.பி கனிமொழியின் கூட்டத்தில் திமுகவினரால் பெண் காவலர்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகினர். இப்படி தன் கட்சிக்குள்ளேயே பல கறைகளைக் கொண்ட திமுக, தமிழகத்தில் பெண்கள் நலனை எப்படி உறுதி செய்யும் என்பது கேள்வி.
அதிமுக ஆட்சியில் பெண்களுக்கான நீதி..!
இந்த விடியா கும்பல் ஆட்சிப் பொறுப்பேற்று பத்து மாதங்களில் 4023 போக்சோ வழக்குகள் பதிவாகியிருக்கிறது. ஓராண்டில் 442 பாலியல் பலாத்கார வழக்குகளும், 1077 மானபங்க வழக்குகளும் பதிவாகியிருக்கிறது. மக்கள் ஓராண்டிலேயே திமுகவின் லட்சணத்தைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். குற்றங்கள் நடந்தபிறகு தடுப்பதற்கு அரசு எதற்கு?, அந்தக் குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்னரே தடுக்கப்பதுதான் அரசின் இலக்கு! அந்த இலக்கினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சரியாகவும், முறையாகவும் செய்தது. பெண்கள் மீது அக்கறை எடுத்து அகிலம் போற்ற வைத்தது அதிமுக அரசு. பெண்களை நோக்கி ஓசி பஸ் தானே என்று கூறுபவர்கள் மத்தியில், தாலிக்குத் தங்கம், தாய்-சேய் நலத்திட்டம் என்று பெண்களுக்கான நற்திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக. தன் சொந்தக் கட்சி நிர்வாகியை “எம்மா நீ எஸ்.சி தானம்மா” என்று சாதியப் போக்கில் பேசுபவர்கள் மத்தியில், சாதிக்க சாதி தடையாக இருக்கக் கூடாது என்று 69 சதவீதம் இடஒதுக்கீட்டினை வழங்கிய அரசு அதிமுக. பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், பெண்களுக்கான உடல் எடை பரிசோதனத் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுத்திட்டம், பாலூட்டும் தாய்மார்களுக்கு தனியறைத் திட்டம், அம்மா குழந்தைகள் நலப் பரிசு பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவித் திட்டம் என்ற அதிமுக அரசு பெண்களுக்காக கொண்டு வந்தத் திட்டங்கள் எக்கச்சக்கம். ஆனால் பெண்களுக்கான திட்டங்களில் எதையும் சாதிக்க முடியா, இந்த விடியா அரசு தங்களை பெண்களுக்கான அரசு என்று சொல்வது கேலிக்கூத்து. முதலில் தன் வீட்டில் உள்ள குப்பைகளை சரிசெய்துவிட்டு நாட்டில் உள்ள குப்பைகளை சரி செய்யுங்கள். இல்லையென்றால் குப்பையோடு குப்பையாக மக்களால் அப்புறப்படுத்தப்படுவீர்கள்.
இந்த திருட்டுக் கும்பலை ஆட்சிக் கட்டிலிலிருந்து வீட்டிற்கு அனுப்புவதற்கான அச்சாணி மதுரையில் போடப்பட்டுவிட்டது. ஆம் ரத்தத்தின் ரத்தங்களே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் ஆகஸ்ட் பத்தில் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கிறது. அதுவே திமுக எனும் தீய சக்தியை விரட்டி அடிப்பதற்கான முழு சாட்சி. வரும் காலத்தில் அமையப் போகுது அதிமுகவின் மக்களாட்சி.