இன்று புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழாவாகும். தமிழகம் முழுவதும் புரட்சித் தலைவி அவர்களின் பிறந்தநாளை அதிமுக தொண்டர்களிலிருந்து பொதுமக்கள் வரை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இன்றைய நாளில் அவர் நினைவைப் போற்றுவோம். தமிழக அரசியலில் பெரிய ஆளுமையாக திகழ்ந்த புரட்சித் தலைவி அவர்கள், அரசியலில் யாரும் செய்யாத ஒரு சாதனை செய்தார். அந்த சாதனையை தமிழகத்தை ஆண்ட எந்தக் கட்சியும் நிகழ்த்திக் காட்டியதில்லை. ஐந்து வருட திமுகவின் மின்சாரமில்லாத ஆட்சியினை 2011ஆம் ஆண்டு தமிழக மக்கள் துரத்திவிட்டு அதிமுகவினை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தனர். பிறகு 2016 ஆம் ஆண்டு வந்தது. அப்போது நடந்த பொதுத்தேர்தலில் யாரும் எதிர்பாக்காத அளவிற்கு ஒரு வெற்றி கிடைத்தது.
அந்த வெற்றி சாதாரண வெற்றி அல்ல. 234 தொகுதிகளிலும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் அதிமுக கழகம் தனித்து நின்று அந்த வெற்றியைப் பெற்றது. இதனை எந்த அரசியல் கட்சித் தலைவர் அவர்களும் செய்து காட்டவில்லை. அதை செய்து காட்டியவர் தமிழகத்தின் இரும்புப் பெண்மணி புரட்சித் தலைவி அவர்கள்தான். இது மிகவும் முக்கியமான சாதனையாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அதற்கு முன்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பான நாடாளுமன்றத் தேர்தலிலும் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று வென்று காட்டினார். அதன்மூலம் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவினை மாற்றி அமைத்தவர் செல்வி ஜெயலலிதா அவர்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும் தனித்து நின்று சாதனை புரிந்தார் புரட்சித் தலைவி அவர்கள்.