புரட்சித் தலைவியும் பெண்கள் நலத் திட்டங்களும்..!

தமிழகத்தில் நலத்திட்டங்கள் என்றாலே, அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் என்று ஆணித்தரமாகக் கூறும் அளவுக்கு, இந்தியாவிற்கே பல முன்னோடி திட்டங்களை அறிமுகம் செய்து வைத்தவர் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள். காலங்கள் கடந்தும் பெண்கள் நலனில் அக்கறை கொண்ட அவருடைய திட்டங்களில் சிலவற்றை பார்க்கலாம்.8 gm Free Gold to Married Women, Crop Loan Waiver: Jaya's Gift to TN

தொட்டில் குழந்தை திட்டம்:

பெண் சிசுக்கொலைகளைத் தடுக்கும் வகையில், 1992-ம் ஆண்டில், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால், தொட்டில் குழந்தைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் உள்ள பெற்றோர், குழந்தையை அரசின் பாதுகாப்பில் ஒப்படைக்க இந்த திட்டம் வழிவகை செய்தது. இத்திட்டத்தால், தமிழகத்தில் பெண் சிசுக்கொலையின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்தியா முழுக்க இந்த தொட்டில் குழந்தைத் திட்டத்தை செயல்படுத்த நாடாளுமன்றத்தில் அண்ணா திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை கோரிக்கை விடுத்திருந்தார். ஒரு நாட்டிற்கே வழிகாட்டும் அளவுக்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த திட்டத்தை செயல்படுத்தியவர்தான் புரட்சித் தலைவி.

தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்திட்டம் :

பெண் சிசுக்களுக்கு கள்ளிப்பால் ஊற்றுவதற்கு காரணம் சென்னவர்களில் அநேகமானவர்கள் கூறியது, எப்படி கல்யாணம் பண்ணி வைப்பேன் என்ற வார்த்தைகள்தான். அதனால், தமிழகத்தில் பிறந்த பெண்கள், தன் பெண்களே என்று தாலிக்கு 4 கிராம் தங்கம், 25 ஆயிரம் ரூபாய் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் கொண்டுவந்து பெண்களின் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் வயிற்றில் பால் வார்த்தவர் புரட்சித்தலைவி.  2011ம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற உடன் அவர் கொண்டு வந்த இந்தத்திட்டம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே யாருமே கிஞ்சித்தும் கற்பனை கூட செய்து பார்க்காத திட்டம் என்றால் அது மிகையாகாது.

மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம்:

ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்கள் சுயமாக முன்னேறி, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள, மகளிர் சுய உதவிக் குழுத் திட்டத்தின் மூலம், அவர்கள் கடனுதவி பெற திட்டம் வகுத்தவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா. இந்தத் திட்டம் இந்திய அளவில் அதிக பெண் சுயதொழில் முனைவோர் உள்ள மாநிலமாக, தமிழகத்தை மாற்றியது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

உள்ளாட்சியில் 50 சதவீத இடஒதுக்கீடு:

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அந்த நாட்டில் பெண்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மையான வளர்ச்சியின் அளவுகோல் என்ற எண்ணத்தோடு, சட்டமன்றத்தில் ஓர் சட்டத்தை இயற்றினார் ஜெயலலிதா. யாருமே எதிர்பார்த்திடாத வகையில், சமூகப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் புரட்சித்தலைவி கொண்டுவந்த சட்டம்தான் உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு சட்டம். இன்று உள்ளாட்சிகளில் வார்டு உறுப்பினர் முதல் மேயர்கள் வரை ஆண்களுக்கு நிகராக பெண்களும் பதவிகளை அலங்கரிக்கிறார்கள் என்றால் அதற்கு விதைபோட்டு நீர்வார்த்தது நம் புரட்சித்தலைவி அம்மாதான்.

Exit mobile version