உலகைப் பொறுத்தவரை மனிதர்கள் அனைவரும் வேகமாக நகர்ந்தும் முன்னேறியும் வருகின்றனர். விரைவில் முன்னேற வேண்டும், பொருளாதார தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்தல் வேண்டும் போன்ற பல காரணங்களுக்காக மனிதர்கள் வேகமாக இயங்கி வருகிறார்கள். அவர்களின் வேலைகளை விரைந்து முடிக்க யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தினால் இதர வேலைகளில் ஈடுபாடு காட்டலாம் என்று தோன்றியதன் விளைவே செயற்கை நுண்ணுணர்வு என அழைக்கப்படும் சாட் ஜிபிடி செயலியின் கண்டுபிடிப்பு ஆகும்.
நீதிமன்றத்தில் ChatGPT :
மனிதர்களின் வேலையை எளிதாக்கும் இந்த சாட்ஜிபிடி செயலியை நீதிமன்றத்திலும் பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள். இது உலகநாடுகளில் சிலவற்றில் ஆங்காங்கே நடைமுறையில் இருந்தாலும், இந்தியாவில் தற்போது முதன் முதலில் சாட்ஜிபிடி செயலியைப் பயன்படுத்தி ஒரு ஒரு தீர்ப்பினை சொல்லியுள்ளார்கள். அது பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் உயர்நீதிமன்றம் ஆகும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திய நீதிபதி அனூப் சிட்காரா ஆவார். அவரது தலைமையிலான அமர்வு ஜஸ்விந்தர் சிங் என்பவரின் பிணை மனுவை விசாரிக்கும் போது சாட்ஜிபிடியை நாடியது. ஜஸ்விந்தர் சிங் மீது குற்றவியல் சதி, குற்றவியல் சார்ந்த மிரட்டல், கலவரம், கொலை போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தன.
தீர்ப்பு வழங்கிய செயற்கை நுண்ணறிவு :
இந்த வழக்கை விசாரணை செய்த சாட்ஜிபிடியானது “வழக்கின் குறிப்பிட்ட சூழ்நிலைகள் மற்றும் அதிகார வரம்பின் சட்டமுறைகளை” பின்பற்றி பற்றி பிணை மனுவானது வழங்கப்படும் என்று நுண்ணறிவு செயலி தெரிவித்தது. அதனடிப்படையில் ஆய்வு செய்த பிறகு ஜஸ்விந்தர் சிங் மீது இரண்டு கொலை முயற்சி சார்ந்த குற்றப் பிண்ணனி இருப்பதால் அவரது பிணை மனுவினை நிராகரிப்பதாக தீர்ப்பு சொல்லியது. அதனையே நீதிமன்றமும் நீதிபதியும் வழிமொழிந்தார்.