2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின்வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சி,ஆர்,பி.எஃப். வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படையினர் 2019 பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து வான்வழித் தாக்குதலை நடத்தியது.புல்வாமா தாக்குதல் தினத்தின் 4ம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாட்டுக்காக உயிர் நீத்த புல்வாமா வீரர்களின் தியாகம் என்றும் நினைவு கூறப்படும் என்று கூறியுள்ளார்.அவர்களின் தைரியம் நாட்டை மேலும் வலுவானதாக மாற்றும் நடவடிக்கைக்கு ஊக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியும், புல்வாமா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் தியாகம் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
Discussion about this post