தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் வியாபாரம் செய்யலாம் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகம் மற்றும் இரவு நேர ஹோட்டல்கள் உரிமையாளர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் வியாபாரம் செய்யலாம் என்ற அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அரசின் இந்த அறிவிப்பிற்கு, வியாபாரிகள் மத்தியில் பலத்த வரவேற்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள பிரபல தனியார் கேண்டீன் ஒன்றின் உரிமையாளர் விஜய் முத்துபிள்ளை மற்றும், புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக சங்க செயலாளர் சவரிமுத்து ஆகியோர் தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
Discussion about this post