புதுச்சேரி நாடாளுமன்ற, ஒசூர் சட்டமன்ற வேட்பாளர்கள்:அமமுக கட்சி தலைமை அறிவிப்பு

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் புதுச்சேரி மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்மாறன் மற்றும் ஒசூர் சட்டமன்ற தொகுதியில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் புகழேந்தி ஆகியோர் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஞான அருள்மணிக்கு பதிலாக, மைக்கேல் ராயப்பன் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version