புதுச்சேரியில் ஜூன் 7ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளை அமல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை எதிர் மனுதாரராக சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை 10 நாட்களுக்கு செயல்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 7ம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவினையும் செயல்படுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணை ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post