புதுச்சேரியை சேர்ந்த பல்வேறு மாற்று கட்சியினர் கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில், புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் தலைமையில் பல்வேறு மாற்று கட்சியினர் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். இளைஞர் காங்கிரஸை சேர்ந்த வழக்கறிஞர் அருள்ச்செழியன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரும், சமூக ஆர்வலர் சுதர்சன் உள்ளிட்ட சிலரும் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். அதிமுகவில் இணைந்த அனைவருக்கும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்தார்.