ஆரணி காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு

ஆரணி அருகே காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் கூட்டணி கட்சியினரோடு வாக்கு சேகரிக்க சென்றார். ஆனால் அவர்களை பிரசாரத்தில் ஈடுபட ஊர்மக்கள் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திமுகவினர் அராஜக செயலால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒரு கட்டத்தில் தாங்கள் அணிந்திருந்த காலணிகளை எடுத்து காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

Exit mobile version