குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் விரக்தி!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரிஷபம் கிராமத்தின் இரண்டாவது வார்டு பகுதியில் வீதி எங்கும் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோரம் தேங்கி கிடக்கும் கழிவுநீர், குடிநீர் குழாயில் கலந்து சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனை விடியா திமுக அரசு கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

YouTube video player

Exit mobile version