பேரூராட்சி வழங்கும் நீரை முறையற்ற வகையில் பெற்று திமுகவினரால் நடத்தப்படும் குடிநீர் ஆலையை மூட வேண்டும் என்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல ஆயிரம் லிட்டர் குடிநீரை, அப்பகுதி திமுக நகர செயலாளர் உள்ளிட்டோர் முறையற்ற வகையில் பெற்று அதில் ரசாயனம் கலந்து விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக குறிஞ்சிப்பாடியில் உள்ள 18 வார்டுகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அனுமதி பெறாமல் இயங்கும் இந்த குடிநீர் ஆலை மீது அரசு நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன்களை, சாலை ஓரங்களில் கொட்டியும் அவர்கள் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழக மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், திமுகவினரின் இந்த முறையற்ற செயலுக்கு அப்பகுதி மக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுகவினர் நடத்தும் இந்த குடிநீர் ஆலையை மூடவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post