காவல்துறைக்கு சவால் விட்ட பப்ஜி மதனை நீண்ட போராட்டத்திற்கு பிறகு தருமபுரியில வைச்சு மதனை கைது செஞ்சிருக்காங்க…
வாயை திறந்தால், வாய் கூசாமல் கெட்ட வார்த்தைகளை பேசும் பப்ஜி மதன் காவல்துறையிடம் சிக்கியது எப்படி? பார்க்கலாம்
டாக்ஸி மதன், 18 பிளஸ் போன்ற யூடியூப் சேனல்கள் மூலமாக தடைசெய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் மதன் கொச்சையான வார்த்தைகளை பேசும் ஆடியோ வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து பப்ஜி மதன் மீது புகார்கள் குவிந்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர்.
பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற 4 பிரிவுகளின் கீழ் மதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புகார்கள் குவிந்த நிலையில் காவல்துறை கைது செய்யும் என்பதை அறிந்த பப்ஜி மதன் தலைமறைவான நிலையில், தன்னை பிடிக்க முடியாது என்றும், சிறை சென்று வெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும் காவல்துறைக்கு சவால் விடுத்து ஆடியோ ஒன்றை வெளியிட்டது பரபரப்பை கூட்டியது.
இதனையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பப்ஜி மதனை பிடிக்கும் பணிகள் தீவிரப்பட்டுத்தப்பட்டன. ஆனாலும், மதனை பிடிக்க முடியாமல் திணறிய காவல்துறை, அடுத்த அதிரடியில் இறங்கியது.
சேலம் சென்ற தனிப்படை போலீசார் மதனின் மனைவி கிருத்திகையும், 8 மாத குழந்தையும் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அதில் மதன் நடத்தக்கூடிய யூடியூப் சேனலுடைய அட்மினாக மனைவி கிருத்திகா செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கிருத்திகாவை கைது செய்த போலீசார் சிறையில் அவரை அடைத்தனர்.
அதேபோன்று பெருங்களத்தூரில் இருந்த மதனின் தந்தை மாணிக்கத்தை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். காவல்துறையின் கிடுக்கிப்பிடியில் சிக்கியதை உணர்ந்த பப்ஜி மதன் செய்வதறியாது தவிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பப்ஜி மதன் தருமபுரியில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அங்கு விரைந்த தனிப்படை அவரை கைது செய்யது.
ஆன்லைனில் தன்னை மிகப் பெரிய வீரனாகவும், ஜாம்பவனாகவும் காட்டிக் கொண்டு ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசி காவல்துறைக்கு சவால் விட்ட மதன் கைது செய்யும் போது காவல்துறையின் காலில் விழுந்து தன்னை விடுவிக்கும்படி கெஞ்சி கதறி அழுத்தாக கூறப்படுகிறது.
பப்ஜி மதன் கைது செய்யப்பட்டதால் அவரின் முன்ஜாமின் மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த நிலையில் பப்ஜி விளையாட்டின் போது அசிங்கமாக பேசி லட்சத்தில் சம்பாதித்து, கோடிகளில் சேமித்து வைத்த மதன் மற்றும் அவரது மனைவி வங்கி கணக்குகளை போலீசார் முடக்கி இருக்கின்றனர்.
யூ-டியூபில் இணைக்கப்பட்டு இருக்கும் கிருத்திகாவின் வங்கி கணக்கில் மட்டும் 4 கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், ஆபாசமாக பேசியே தங்க, வைர நகைகளை மதன் வாங்கி குவித்து இருப்பதை கண்டு காவல்துறையே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் 45 லட்ச ரூபாய் மதிப்பில் 2 சொகுசு விடுகள் என சொகுசாக வாழ்ந்து வந்த மதனின் இரண்டு விலை உயர்ந்த கார்களும் பறிமுதல் செய்யப்பட்டு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு இருக்கும் மதனை சேலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்ற போலீசார், அங்கிருந்து 3 லேப்டாப்களை பறிமுதல் செய்து இருக்கின்றனர். அதில் இருக்கும் தகவல்கள் பகீர் ரகம் என்கிறது காவல்துறை வட்டாரம்.
கைது செய்யப்பட்டுள்ள மதனை காவலில் எடுத்து விசாரிக்கும் போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே மதனின் கூட்டளிகள் சிலரை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Discussion about this post