தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இரண்டாவது ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே முதல் ஆடியோவில் சபரீசனும் உதயநிதியும் சேர்ந்து 30,000 கோடி ரூபாயை ஒரே வருடத்தில் சம்பாதித்தார்கள் என்று சொன்னார். தற்போது இந்த ஆடியோவில் “முதல்வரின் மகன், மருமகன் கையில்தான் கட்சியே உள்ளது” என்று கூறியிருக்கிறார். மேலும் நிதி மேலாண்மையை மகனும், மருமகனுமே பார்க்கட்டும் என்று கோவத்துடன் பேசியுள்ளார்.
கட்சியையும் மக்களையும் தனி தனியாக கவனிக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படியா இருக்கிறது. இங்கு எல்லா முடிவுகளையும் அமைச்சர்களும் எம் எல் ஏக்களும் தான் எடுக்கிறார்கள். நிதி மேலாண்மை செய்வது என்ன சுலபமா? அவர்கள் ஊழல் பணத்தை அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். 8 மாதங்கள் காத்திருந்து ஒரு முடிவு எடுத்துள்ளேன். இவர்களின் போக்கு ஒரு நிலையான முறை கிடையாது. இப்போது நான் விலகினால், இந்த குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால், அவர்கள் செய்தது அனைத்தும் அவர்களுக்கே எதிர்வினையாகத் திருப்பி அடிக்கும் என்று பேசியுள்ளார் பிடிஆர்.