ஹாங்காங் போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

ஹாங்காங்கில் சீன ஆதிக்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீசிய பெட்ரோல் குண்டு வெடித்ததில் செய்தியாளர் மீது தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் போராட்டக்காரர்கள் முகமூடி அணிந்து போராடுவதற்கு ஹாங்காங் அரசு தடை விதித்தது. முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முகமூடி அணிந்த ஒருவர் காவல்துறையினரை நோக்கி வீசிய பெட்ரோல் குண்டு வெடித்ததில் அருகிலிருந்த செய்தியாளர் மீது தீப்பிடித்தது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். காவல்துறையினர் முகமூடி நபரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Exit mobile version