பிரான்ஸில் எரிபொருள் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ் நாட்டில், எரிபொருள் கொள்கையை எதிர்த்து நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம், வன்முறையாக மாறியதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எரிபொருள் மீதான வரிவிதிப்பை கண்டித்து, பிரான்சில் நடைபெறும் போராட்டம் வலுவடைந்துள்ளது. வாகன ஓட்டிகள் அணிய வேண்டிய மஞ்சள் நிற உடைகளை அணிந்தவர்கள், வார இறுதிநாட்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாரீஸ் நகரத்தின், செயிண்ட் ஜெர்மைன் தெருவில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், குப்பைத் தொட்டிகளை கவிழ்த்துப்போட்டதோடு, கண்ணில் எதிர்பட்ட பொருட்களை தீ வைத்து கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, செயின் ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் திரண்ட போராட்டக்காரர்கள், படகுகளுக்கும், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

பிரான்ஸ் அதிபர் பதவி விலக கோரி முழக்கம் எழுப்பியவர்கள், வன்முறையில் ஈடுபட்டதால், காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை கலைத்தனர்.

Exit mobile version