கமுதி அருகே நீர் பற்றாக்குறை உள்ள போதிலும் பொதுமக்கள் உதவியுடன் விவசாயி ஒருவர் ஏராளமான மரங்களை வளர்த்து வருகிறார்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வலையபூக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ். விவசாயியான இவர், குண்டாற்றின் கரை அருகே இருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றியுள்ளார். நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களின் உதவியுடன் வேம்பு,மலைவேம்பு, வாதம், கொன்றை, புன்கை, நெல்லி போன்ற 1000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஐந்து ஆண்டுகளுக்கு முன் நட்டு பாதுகாத்து வந்துள்ளார். தற்போது மழையின்மையால் நிலத்தடி நீர் இல்லாத நிலையிலும் மரம் வளர்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Discussion about this post